ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (11:21 IST)

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் ஈபிஎஸ்-ஓபிஎஸ் சென்றது எங்கே? பரபரப்பு தகவல்

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் ஈபிஎஸ்-ஓபிஎஸ் சென்றது எங்கே?
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முடிவு சற்றுமுன் தெரியவந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து அவர் முதல்வர் வேட்பாளராக விட்டுக் கொடுத்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது 
 
இதனை அடுத்து அதிமுக வேட்பாளர் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை அறிவிக்கப்பட்ட உடன் 11 வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர் 
 
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவகத்தில் அவர்கள் ஆசிபெற்றனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் அவர்களுடன் சென்று எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை அடுத்த அடுத்த கட்ட நடவடிக்கையாக தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது