புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (10:34 IST)

முத்தலாக் மசோதவை ஆதரித்தது ஏன் ? – ஓபிஆர் விளக்கம் !

முத்தலாக் மசோதாவுக்குத் தனிப்பட்ட முறையிலேயே ஆதரவுத் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ஓ பி ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி முத்தலாக் மீதான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓபி ரவீந்தரநாத் அதற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் ’இது பெண்ணுரிமையின் மைல்கல்’ எனப் புகழ்ந்தார். இதற்கு முன்னர் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதெல்லாம் அதனை எதிர்த்து வந்த அதிமுக இப்போது ஆதரித்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள வேலூர் தொகுதி தேர்தலில் அதிமுக தோல்வி அடைய முத்தலாக் மசோதாவும் ஒருக்காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். அதில் ’ நான், தனிப்பட்ட முறையிலேயே முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்தேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் கேபினட் அமைச்சர் பதவிக்காததான் ஆதரித்து வாக்களித்தீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது ‘அதுபற்றி யோசித்தது கூட இல்லை’ எனத் தெரிவித்தார்.