செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (13:47 IST)

தமிழகத்தை அடுத்து புதுவையிலும் ஆளுனர் தேநீர் விருந்து புறக்கணிப்பு: அதிரடி அறிவிப்பு..

தமிழகத்தில் குடியரசு தின விழா தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தமிழகம் போலவே புதுவையிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.  
 
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாள் அன்று தமிழக ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம்,.
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழிசை சௌந்தரராஜன் தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக  அறிவித்துள்ளன. 
 
தமிழிசை செளந்தரராஜன் அரசியல் செய்வதாக கூறி, தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva