1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:52 IST)

பிரதமரை சந்திக்கும் தமிழக பிரபலங்களின் பட்டியல்.. கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?

modii
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக பிரமுகர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பட்டியலில் இருந்து பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து கணிக்க முடியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சென்னை வரும் பிரதமரை வரவேற்கும் பட்டியலில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர்கள் உள்ளது. அது மட்டும் இன்றி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன்,  புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம்,  இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர்  பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். 
 
எனவே  இந்த மூன்று பேருமே வரும் பாராளுமன்ற தேர்தலில்  பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  தேர்தல் நெருங்க நெருங்க தான்  அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை என்பது உறுதியாக தெரியவரும்.
 
Edited by Mahendran