மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம்; ஆபத்தில் உள்ளதா ஓபிஆர் எம்.பி பதவி?
தனது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஓ.பி.ரவீந்திரக்குமார் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரக்குமார். தேர்தலில் 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓபிஆர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஓபிஆரின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேனியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஓபிஆர் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரியிருந்த நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி ரவீந்திரக்குமார் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கை நிராகரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் ஓ.பி.ஆர் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.