வெற்றிவேல் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு – டிடிவி தினகரன்

dinakaran
Sinoj|

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் அவர்கள் சற்று முன் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் அமமுக கட்சியை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகித்த வெற்றிவேல் அவர்கள் சென்னை ஆர்கே நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை ஆர்கே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் வெற்றிவேல் என்பதும், சசிகலா தினகரன் தீவிர ஆதரவாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் செயல்பட்டு வந்தவர் வெற்றிவேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிவேல் அவர்களின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வெற்றிவேலின் மறைவு செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.
சொல்ல முடியாத துயரம் என் தொண்டையை அடைக்கிறது. புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பைப்பெற்றவர்,. என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர்.

vetrivel

வெற்றிவேலின் மறைவு தனிப்பட்டமுறைவில் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :