1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today Gold Price in Chennai increases

உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Price
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.    
 
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,184 விலை உயர்ந்து  ரூ.38,824-க்கு விற்பனையாகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 23 உயர்ந்து ரூ.4,853 விற்பனையாகிறது. 
அடுத்த கட்டுரையில்
50 ஆயிரத்தை நோக்கி குறைந்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!