புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (16:38 IST)

சென்னை ஐகோர்ட்டில் காணொலி மூலம் விசாரணை நிறுத்தம்!

சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை முதல் காணொளி மூலம் விசாரணை செய்யப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
 
 சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக காணொளி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடத்தப்படும் விசாரணை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காணொளிக்காட்சி விசாரணையில் இணையதள தொடர்பு துண்டிப்பு உள்பட பல்வேறு சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது