புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (16:34 IST)

சென்னை மாநகராட்சியில் எத்தனை ஆண், பெண் கவுன்சிலர்கள்?

சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக ஆண்களைவிட பெண் உறுப்பினர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் இவர்களில் 102 கவுன்சிலர்கள் என்றும் 98 ஆண் கவுன்சிலர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக ஆண்களைவிட பெண் கவுன்சிலர்கள் 4 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது