தொடர்புடைய செய்திகள்
- தன்னை இந்து தீவிரவாதி என கூறிக்கொண்ட ஆசாமி! – கைது செய்த போலீஸார்!
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
- முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு!
- தமிழகத்தில் கிரிக்கெட் அகாடமியை துவங்கும் சென்னை கிங்ஸ் !
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4788.00 விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து ரூபாய் 38304.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5154.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41232.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
