திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (10:37 IST)

மறுபடி எகிப்து வெங்காயத்துக்கு வேலையா? வெங்காயம் இவ்வளவு விலையா? – அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த ஆண்டு வெங்காய பற்றாக்குறையால் விலை அதிகரித்த நிலையில் இந்த ஆண்டும் வெங்காய விலை அதிகரிப்பது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வட மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் வெங்காய சாகுபடி பாதித்ததால் வெங்காய விலை கடும் ஏற்றத்தை கண்டது. இதனால் மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் மத்திய அரசு தேவைக்காக எகிப்திலிருந்து டன் கணக்கில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகி வருகிறது. முன்கூட்டிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

எனினும் பற்றாக்குறை ஏற்பட்டால் மீண்டும் எகிப்து வெங்காயம் இறக்குமதி ஆகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், அந்த வெங்காயம் காரம் குறைவாக இருப்பதால் மக்கள் அதை வாங்குவதற்கு விரும்புவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.