1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says DMK alliance parties will be interest with ADMK

பாமக பங்களிப்பு அனுமானம்; திமுக கூட்டணி கட்சிகள் டார்கெட்! – அமைச்சர் ஜெயக்குமார்!

Tamilnadu
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக – திமுக இரு தரப்பிலும் மக்களவை தேர்தலுக்கு அமைத்த கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால் கூட்டணிகள் மாறவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக, அதிமுகவிடம் ஆட்சியில் பங்களிக்க இடம் தர கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்பது அனுமானம்தான், அதேசமயம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அங்கிளுக்கு டாட்டா சொல்லுங்க.. புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!