வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (16:51 IST)

தமிழக மக்கள் எப்படி இருக்காங்க? சீக்கிரம் வந்திடுறேன்! – சசிகலா எழுதிய கடிதம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள சூழலில் சசிகலா சிறையிலிருந்து கடிதம் எழுதியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் அக்ரஹரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவர் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அவரது வழக்கறிஞருக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும், அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதும் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நன்னடத்தை விவகாரத்தில் சிறை அதிகாரிகள் சட்டபடியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புவதாகவும், 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் தீர்ப்பு நகல் திருத்தம் தொடர்பாக மனு தாக்கல் செய்யமுடியுமா என டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் பேசவும், அதற்கு முன்னதாக டிடிவி தினகரனின் ஆலோசனைகளை பெற்று கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் சசிக்கலா தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.