1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister says ADMK will merge with DMK

அதிமுக திமுகவிடம் சங்கமம் ஆகிவிடும் - அமைச்சர் கணிப்பு!

அதிமுக
காலப்போக்கில் அதிமுக திமுகவிடம் சங்கமம் ஆகிவிடும் என  பேட்டியளித்துள்ளார் அமைச்சர் பெரியசாமி. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த நிலையில் இன்றும் ஒருவர் திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே அமைச்சர் பெரியசாமி, காலப்போக்கில் அதிமுக திமுகவிடம் சங்கமம் ஆகிவிடும் என  பேட்டியளித்துள்ளார். மேலும் அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கூச்சம் குழப்பம்: தொடங்கிய 21 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்ட புதுவை சட்டமன்ற கூட்டம்!