1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:13 IST)

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் பலி: காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை!

online rummy
ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் காவிரி ஆற்றில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என மசோதா இயற்றப்பட்டு அந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை முழுவதையும் இழந்து உள்ளார். 
 
இதனை அடுத்து மணமடைந்த அவர் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று திடீரென வாகனத்தை காவிரி ஆற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக தாமதம் செய்யாமல் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
 
Edited by Siva