வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (13:39 IST)

ஆன்லைன் சூதாட்டத்தை அடக்குறதுதான் நல்லது! – மத்திய அமைச்சர் கருத்து!

ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

கடந்த சில காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் மக்கள் பலர் பணத்தை இழப்பதும், அதனால் கடன் தொல்லைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர் கதையாகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியானதாக இருக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டியபிறகு ஆன்லைன் சூதாட்டத்தை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்” என அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K