1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (15:50 IST)

ஆன்லைன் மசோதாவுக்கு அனுமதி வழங்காத கவர்னர்.. கருத்து கூற முடியாது என மத்திய அமைச்சர் தகவல்

rummy
ஆன்லைன் மசோதாவுக்கு தமிழக கவர்னர் அனுமதி வழங்காதது குறித்து கருத்து கூற முடியாது என மதிய அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் இதுவரை 40 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ஆன்லைன் மசோதா காரணமாக உயிர் இழப்பவர்களை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இதனை அடுத்து பதில் கூறிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 19 மாநிலங்கள் இது தொடர்பான மசோதா கொண்டு வந்துள்ளன என்றும் அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்யும் என்றும் அவர்  தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாடு ஆளுநர் மசோதாவை கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva