செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:31 IST)

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மகன்.. அதிர்ச்சியில் தீக்குளித்த தாய்: சென்னையில் பரபரப்பு..!

Fire
ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் மகன் பணத்தை இழந்ததை அறிந்த தாய் தீக்குளித்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மாதவரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் நிறுவனத்தில் உள்ள மூன்று லட்ச ரூபாய் கையாடல் செய்து அதை ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து நிறுவனத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்றுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என காவல்துறை கெடு விதித்திருந்தது. 
 
இந்த நிலையில் இந்த தகவல் கேள்விப்பட்ட தேவேந்திரனின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பணத்தை கொடுக்க முடியாத தேவேந்திரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran