புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:35 IST)

சிலிண்டர் வெடித்து விபத்து: மேலும் ஒருவர் பலி

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
சேலம் கருங்கல்பட்டியில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் சுற்றியிருந்த வீடுகளும் சேர்த்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
ஆம், தீயணைப்பு துறை வீரர் பத்மநாபன் என்பவர் வீடு தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கிய அவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே மூதாட்டி ராஜலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுமி உட்பட 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.