வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (15:22 IST)

திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலி; கழுத்தை நெறித்து கொன்ற இளைஞன்!

சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கள்ளக்காதலியை காதலன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொல்லம்பட்டறை பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை ஒன்றில் பெண் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் இறந்த பெண் குறித்து மேற்கொண்ட விசாரணையில் அவர் அடரி களத்தூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசி என்பது தெரியவந்துள்ளது.

சிலம்பரசியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் சிலம்பரசி தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவர் வீட்டுக்கு அருகே இருந்த வீட்டை சேர்ந்த இளைஞர் இளங்கோ என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளது போலீஸாருக்கு தெரிய வர இளங்கோவை போலீஸார் விசாரித்துள்ளனர்

.விசாரணையில் இருவரும் லாட்ஜுக்கு சென்றதும், அங்கு சிலம்பரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதில் இளங்கோ அவரை கழுத்தை நெறித்துக் கொன்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.