புதன், 12 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (10:44 IST)

எனிமி திரைப்பட முதல் இரண்டு நாட்கள் வசூல் நிலவரம்!

விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி சராசரியான ஓபனிங்கை பெற்றுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தின் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் எனிமிக்கு முதலில் போதுமான திரைகள் கிடைக்கவில்லை. இதனால் 200 திரைகளுக்கு மேல் கிடைப்பதே பெரும்பாடாகிவிட்டது. ஆனால் இப்போது அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனங்களால் இந்த படத்தின் மீது வெளிச்சம் கிடைத்துள்ளது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியான எனிமி படம் முதல் இரண்டு தினங்களுக்கு சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் மழை வேறு தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மேலும் வசூல் பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.