திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:54 IST)

சுங்கசாவடியில் வாக்குவாதம்; கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள்! – சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுங்கசாவடியில் ஏற்பட்ட தகராறால் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றுள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நந்தக்கரை பகுதியில் சுங்கசாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கசாவடியை தற்போது புதிய நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அங்கு பணிபுரிந்து வந்த 60 பேரை பணி நீக்கம் செய்த அந்த நிறுவனம் புதிய நபர்களை பணியமர்த்தியுள்ளது.

இதனால் முன்னாள் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் சுங்க சாவடிக்கு சென்று மீண்டும் பணி வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுங்கசாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் நெடுநேரமாக காத்திருந்த வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலே சுங்க சாவடியை கடந்து சென்றுள்ளன.