1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One more college student suicide for Bluewhale game

புளூவேல் கேமிற்கு மேலும் ஒரு பலி: மதுரை கல்லூரி மாணவர் தற்கொலை

bluewhale
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் புளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து வரும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்திய சிறுவர், சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் புளூவேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் முதல் பல தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால் தமிழகத்தை பொருத்தவரையில் ஆட்சியை தக்க வைக்கவும் பாதுகாக்கவுமே நேரம் போதவில்லை என்பதால் மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக புளூவேல் விளையாட்டு குறித்து பேசுவதற்கே ஆளும் அரசியல்வாதிகளுக்கு நேரமில்லாமல் உள்ளது.
 
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் மொட்டைமலையை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் இந்த விளையாட்டை தொடர்ந்து  1,615 மணி நேரம் விளையாடி கடைசி டாஸ்க்கான தற்கொலை டாஸ்க் வரை வந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
ராம் ரஹிமின் மனைவி எங்கே? வலைவீசி தேடும் ஆசிரம நிர்வாகிகள்