புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (18:45 IST)

பேய் பொம்மை: ஹாலிவுட் ஹாரர் கதை இல்லங்க...

இங்கிலாந்தில் பொம்மை ஒன்று தனது தந்தையை அடித்து வெளுத்தெடுத்தாக லீ ஸ்டீர் என்பவரின் பதிவு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இங்கிலாந்தை சேர்ந்த லீ ஸ்டீர் சமீபத்தில், இணையதளம் மூலம் ரூ.71,000 கொடுத்து பொம்மை ஒன்றை வாங்கினார். 
 
இந்த பொம்மையை இவர் வாங்கும் முன் அதனை ஒரு பெண் வைத்திருந்தார். விற்பனையின் போது அந்த பெண், இந்த பொம்மை என் கணவரை தினமும் அடிக்கிறது. மேலும், என் நெக்லஸை ஒளித்து வைத்திருக்கிரது என குறிப்பிட்டுருந்தார்.
 
லீ ஸ்டீர் அந்த பொம்மையை ஆராய்ச்சி செய்வதற்காக வாங்கினார். அதற்கு எலிசபெத் என்று பெயர் சூட்டினார். இந்த பொம்மை தற்போது அவரது தந்தையை அடிப்பதாக பதிவிட்டுள்ளார்.
 
மேலும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்ந்த பலரும் இது உண்மையில் பேய் பொம்மைதான் என புலம்பி வருகின்றனர்.