1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (22:01 IST)

டுவிட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? கமல் அரசியல்

நடிகர் கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட முழுநேர அரசியலில் ஈடுபட்டுவிட்டார். கமல்ஹாசனின் டுவிட்டர் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிடும்போதெல்லாம், அரசியல்வாதிகளுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில்  கமல் டுவிட்டர் அரசியலை மட்டும் செய்யாமல் களத்தில் இறங்கினால்தான் அரசியல் என்றால் என்ன என்பது தெரியவரும் என்று பலர் விமர்சனம் செய்தனர்.



 
 
இந்த நிலையில் கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், அரசியலை டுவிட்டரில் ஆரம்பித்தால் என்ன? கோவையில் ஆரம்பித்தால் என்ன? தொடங்கியது தொடங்கியதுதான். அதில் இருந்து பின்னடைய போவதில்லை.
 
தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம் எனவே தேவைப்படும்போதெல்லாம் போராட்டம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
 
தேவை ஏற்பட்டால் கோட்டையை நோக்கியும் புறப்படுவோம். அரசியலை இந்த திருமண விழாவில் இருந்தே தொடங்குங்கள். இது திருமண விழா மட்டுமில்லை, அரசியல் ஆரம்பவிழாவும் கூட' என்று கமல் ஆவேசமாக பேசினார்.