திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:14 IST)

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்!.

சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரபமுகர் ஒருவரை தாக்கிய வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். நேற்ற் உ இவ்வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்து  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதல் வழக்கின் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையிலேயே இருப்பார் எனத் தகவல் வெளியாகிறது.