1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One lakh to women auto drivers

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்! அமைச்சர் அறிவிப்பு

women auto
தமிழகத்தில் உள்ள 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை குழுவால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு அமல்!