1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (09:41 IST)

வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு அமல்!

Lockdown
சீனாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. 
 
இந்த நிலையில் சீனாவை அடுத்து வடகொரியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக தலைநகர் பியோங்காங் என்ற பகுதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீடுகளிலே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவை அடுத்து வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva