செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (18:55 IST)

ரஜினி மகள் வீட்டில் திருடியவரிடம் இருந்து ரூ.1 கோடி மீட்பு..!

ரஜினி மகள் வீட்டில் திருடியவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை உள்பட ஆபரணங்கள் திருடு போனதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது ரஜினி மகள் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவர் தான் நகைகளை திருடி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது 
 
மேலும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பணத்தில் ஈஸ்வரி சோளிங்கநல்லூரில் சொகுசு வீடு ஒன்று வாங்கியதும் அம்பலம் ஆகியுள்ளது 
 
இதனை அடுத்து திருடியவரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடி சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திருட்டு வழக்கில் ஈஸ்வரி வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva