சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (09:06 IST)

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ட்ரண்டிங் துர்கா’… லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள். இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னால் இப்போது அதிக கதைகளைக் கேட்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ‘ட்ரண்டிங் துர்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் அவர் ஒரு நடிகையாக நடிக்கிறாராம். இந்த படத்தின் மூலம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.