திருடிய காசில் நடிகைகளுடன் ஜாலி! 60 வயதில் சொகுசு வாழ்க்கை! – போலீஸை அதிர செய்த திருடன்!
தமிழ்நாட்டின் பல மாநிலங்களில் கொள்ளையடித்த திருடன் ஒருவன் அதை வைத்து நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்கும் கடை நடத்தி வருபவர் சுந்தர். கடந்த 10ம் தேதி சுந்தரின் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 4.70 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிசிடிவி காட்சிகளை திரட்டி அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும் இதேபோன்ற சம்பவம் முன்னர் நடந்ததாக தெரிய வந்த நிலையில் அதனுடன் தொடர்பு படுத்தி பார்த்ததில் இரு இடங்களிலும் ஒரே ஆள்தான் கைவரிசை காட்டினார் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விசாரணையை மேலும் வலுப்படுத்திய போலீஸார் கேரள மாநிலத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை சாகுல் ஹமீது கூறியுள்ளார். சாகுல் ஹமீதுவிற்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் என இரு மனைவிகள் இருந்துள்ளனர். மருந்து விற்பனை பிரதிநிதியாக காலை வேளைகளில் பணிபுரியும் ஹமீது இரவு நேரங்களில் கடைகளில் திருடி வந்துள்ளார், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இவர் பல கடைகளில் திருடி இருந்துள்ளார்.
இவ்வாறாக திருடிய பணத்தை கொண்டு கேரளாவில் சொகுசு விடுதிகளில் அறை எடுத்து நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K