சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (08:39 IST)

60 சவரன் நகைகளை காணவில்லை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார்..!

aiswarya rajini
இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்த 60 சவரன் நகை உள்பட விலை உயர்ந்த பொருள்கள் மாயம் ஆகிவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் லால் சலாம் என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது வீட்டில் 60 சவரன் நகைகள் வைரம் மற்றும் நவரத்தின கற்கள் அடங்கிய விலை மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப் போய்விட்டதாக தெரிகிறது 
 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டின் லாக்கரில் நகைகளை வைத்திருந்த நிலையில் அவை மாயமாகி உள்ள நிலையில் தற்போது அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva