1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Unchanged Today; Silver Price Drops by ₹6 Per Gram

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

தங்கம் விலை
சென்னையில் இன்று சனிக்கிழமை  ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. ஒரு பவுன் (8 கிராம்) ஆபரண தங்கம், நேற்று வெள்ளிக்கிழமை இருந்த அதே விலையான ரூ.98,960-க்கு விற்கப்படுகிறது.
 
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு காரணமாக, விரைவில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ரூ.216-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.6,000 குறைந்து ரூ.2.10 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.  
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?