1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Omni buses stop their services due to lockdown

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்! – ஆம்னி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Tamilnadu
இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் செயல்படாது என்றும் காலை வேளைகளில் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் ஆம்னி பேருந்துகளும் பகலில் மட்டும் செயல்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பகல் நேரங்களிலே கூட மக்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி !