புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:37 IST)

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான்?

வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 43 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவில் தற்போது 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேர்களுக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார் 
 
பரிசோதனை முடிவு வந்த பின்னரே 43 பேரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மகாராஷ்டிரா டெல்லி உள்பட பல மாநிலங்களில் 50க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 43 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது