ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:07 IST)

காமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை- எஸ்.ஏ. சந்திர சேகர்

காமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு.இவரது இயக்கதிதில், நடிகர் சிம்பு.- எஸ்ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாநாடு.

இப்படம் வசூல் ரீதியாகவும்,  விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர், கமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லைல் திரைப்படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரம் நல்லவராக இருப்பதைப் பலரால் ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு படத்தில் இடம்பெற்ற மத அரசியல்  காட்சி இந்தியாவையும், வாரிசி அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.  இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.