தொடர்புடைய செய்திகள்
- தந்தையை கைவிட்ட மகன்களுக்கு சிறை, அபராதம்!.. 84 வயசில் கேஸ் போட்டு தீர்ப்பு வாங்கிய தாத்தா!..
- திருச்சி த.வெ.க-வில் வாரிசு போட்டி: கு.ப.கிருஷ்ணன் VS வெல்லமண்டி நடராஜன்! புஸ்ஸியின் ராஜதந்திரம்
- எதிர்க்கட்சி கூட இல்லை.. இனிமேலும் அமைதியாக இருக்க கூடாது.. யூடியூப் சேனல் தொடங்குவோம்: எடப்பாடி பழனிசாமி
- என்னை கொலை செய்ய கூலிப்படை!. அருண்குமார் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!...
- தவெக பக்கம் தாவும் திமுக முக்கிய நிர்வாகிகள்!.. முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!..
அமலாக்கத்துறையால் தேடப்படும் ஜான் பிரிட்டோ ஆதவ் அர்ஜூனா குடும்பத்தை சேர்ந்தவரா? ஒரு விளக்கம்...!
மத்திய அமலாக்கத் துறை சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ, சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸின் சகோதரர் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
40 வயதாகும் இந்த ஜான் பிரிட்டோவின் தந்தையின் பெயர் இருதயராஜ் என்பதும், அவர் சென்னையின் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அமலாக்கத் துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஜான் பிரிட்டோ தற்போது தலைமறைவாக உள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி அறிக்கையின்படி, லீமா ரோஸின் சகோதரர் பெயர் பி. ஜான் பிரிட்டோ ஆகும். எனவே, தற்போதைய வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் லீமா ரோஸின் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், பெயரில் உள்ள ஒற்றுமை காரணமாக எழுந்த குழப்பமே இது என்பதும் தற்பொழுது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva
