1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (13:45 IST)

நாதக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் எலும்பு முறிவு.. போலீசார் தகவல்..!

நாதக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் எலும்பு முறிவு.. போலீசார் தகவல்..!
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதான நான்கு பேர்களில் மூன்று பேர்களுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மதுரை செல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் பாலமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் கைதான நான்கு பேரில் மூன்று பேர் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளதாகவும் அப்போது கீழே விழுந்ததால் மூன்று பேர்களின் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது கால் எலும்பு முறிந்த மூவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கால் கட்டுடன் சிகிச்சை பெற்று வருவது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
கடந்த சில வருடங்களாகவே முக்கிய வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகள் அடுத்த சில நாட்களில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran