புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (09:31 IST)

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை!

Murder

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச்செயலாளராக பதவி வகித்து வரும் பாலசுப்பிரமணியன் மீது சில குற்ற வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை பாலசுப்பிரமணியன் செல்லூர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் பாலசுப்பிரமணியனை ஓட ஓட விரட்டி சென்று வெட்டிக் படுகொலை செய்துள்ளனர்.

அதிகாலையே அமைச்சர் பிடிஆர் வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு முன்பகை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் அரசியல் பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து மதுரையிலும் ஒரு கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K