தொடங்கியது வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தள்ளிப்போன நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை அல்லது மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பருவமழை ஆண்டுதோறும் பெய்யும் சராசரி அளவிற்கோ அல்லது அதிகமாகவோ இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.