திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (10:44 IST)

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட சிறுவன்; ஆதரவு கரம் நீட்டிய விஜய் மக்கள் இயக்கம்!

வேலூரில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதி அளித்து உதவியுள்ளனர்.

வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். சாஸ்திரி நகரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் சரவணனுக்கு ரவி என்ற மகன் உள்ளார். ரவிக்கு சிறுவயதிலிருந்தே சிறுநீரக கோளாறு உள்ள நிலையில் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அடிக்கடி அதிக பணம் செலவு செய்து டயலசிஸ் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு 12 லட்ச ரூபாய் வரை செலவாகும் என கூறப்பட்ட நிலையில், விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் மன்றத்தினர் ஒரு லட்ச ரூபாயை முதற்கட்ட நிதியாக அளித்துள்ளனர்.