தொடர்புடைய செய்திகள்
- ரூ.30 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!
- இன்று மாலை 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்
- அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை?
- திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி- எடப்பாடி பழனிசாமி
வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல இடங்களில் பெய்து வருகிறது. தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவாகப் பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இன்று வரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், கிழக்கு திசை ககாற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராம நாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருது நகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
