1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. North Indian grocery loads deman make oprice hyke

வட மாநிலங்களில் இருந்து சப்ளை இல்லை; தீபாவளிக்கு உயரும் மளிகை விலை!

Tamilnadu
வட மாநிலங்களில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாய சாகுபடி குறைந்துள்ளதால் மளிகை பொருள் விலை உயர வாய்ப்பிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பருப்பு, எண்ணெய், கடலை மற்றும் பல்வேறு மளிகை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வகையான மளிகை பொருட்கள் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வட மாநிலங்களில் பலத்த மழை வெள்ளத்தால் விவசாய சாகுபடி பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு பொருட்கள் ஏற்ற செல்லும் லாரிகளில் 50% லாரிகள் சரக்கு இல்லாமல் திரும்புவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த பற்றாக்குறையால் தீபாவளி சமயத்தில் மளிகை பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
திருமா வளவன் தொகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…நடிகை குஷ்பு கைது!