வாரிசு அடையாள அட்டையை வெச்சு பதவி குடுக்க மாட்டோம்! – அமைச்சர் உதயகுமார் நச்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (09:30 IST)
அதிமுகவில் யாருக்கும் வாரிசு என்ற காரணத்திற்காக பதவி தருவது கிடையாது என திமுகவை சிலேடையாக விமர்சித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்படவில்லை என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்டன அறிக்கைகளை விடுத்து வருகிறார். மறுபுறம் கமல்ஹாசன் பருவமழை முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ”காணொளியில் அமர்ந்து அறிக்கை விடுவது பெரிய சாதனையல்ல.களத்தில் நின்று போராடுவதுதான் முக்கியம். குட்டையை குழப்பி மீன்பிடிக்கலாம் என்பது போல பலர் பருவமழையை வைத்து மீன்பிடிக்க முயல்கிறார்கள்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :