1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. less buses are run due to transport staffs strike

பயணிகளுக்கு அச்சம் வேண்டாம்.. பேருந்துகள் இயங்குகின்றன..போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்

bus
நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் பயணிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் போதுமான பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ்   அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக பகலில் கூட ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார் என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு கோரிக்கை வைத்தால் இரவு வேளைகளில் மட்டுமின்றி பகலிலும் இயக்க தயார் என்று தெரிவித்துள்ளது. 

 
அது மட்டும் இன்றி தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என்றும், அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார். 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அரசு பேருந்துகளை எங்களை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது: தொழிற்சங்கத்தினர் கருத்து