திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (01:32 IST)

காலில் கிடக்கும் செருப்பை கொண்டு அடித்திருக்க வேண்டும்: ஹெச்.ராஜாவின் இந்த கோபம் ஏன்?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் திருடனிடம் ஓட்டுக்கு பணம் வாங்கியுள்ளனர் என்றும், இது பிச்சை எடுப்பதை விட கேவலம் என்றும் கமல்ஹாசன் கூறியதற்கு கண்டும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் ஆா்.கே.நகரில் ஓட்டுக்காக பணம் கொடுத்தவா்களை மக்கள் செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச். ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜகவின் தேசிய செயலாளா் ஹெச். ராஜா பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது அவா் கூறியதாவது: ஆர்.கே.நகரில் பெறப்பட்டுள்ள வெற்றி ஜனநாயத்திற்கு எதிரான. பணத்தை வைத்து வெற்றி விலைல்கு வாங்கப்பட்டுள்ளது என்று நடிகா் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு உடன்படுகிறேன்

ஆர்.கே.நகர் பொதுமக்கள் ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்தவா்களை காலில் கிடக்கும் செருப்பை கொண்டு அடித்திருக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.