திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (23:10 IST)

உலக வரலாற்றில் கடன் சொல்லி ஓட்டு கேட்ட ஒரே நபர் தினகரன்: ஜெயகுமார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ள தினகரன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய வெற்றி குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'உலக வரலாற்றில் கடன் சொல்லி ஓட்டு கேட்ட ஒரே நபர் தினகரன் மட்டுமே என்றும், ரூ.10 ஆயிரம் கடனை கேட்டு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அவரை தேடி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை நம்பி மட்டுமே நாங்கள் உள்ளோம், தவிர பணத்தை நம்பி கிடையாது என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் விமர்சனங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் கமல்ஹாசன் அரசை விமர்சிப்பதாகவும், கமல்ஹாசனுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் திமுக மற்றும் தினகரனை திட்டி பார்க்கட்டும் என்றும் தெரிவித்தார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணம் கொடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் எந்தவித ஆதாரத்தையும் கையில் வைத்திருக்காமல் இத்தகையை குற்றச்சாட்டுக்களை கமல் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.