1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (22:09 IST)

பட்ஜெட் விலையில் டேப்லெட்: சாம்சங் அதிரடி!!

தென் கொரியாவை சேர்ந்த முன்னணி எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், உலக அளவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி இடத்தில் உள்ளது. சாம்சங் டேப்லெட் தயாரிப்பிலும் ஈடுப்பட்டது. 
 
ஆனால், ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது டேப்லெட் விற்பனை குறைவாகவே உள்ளது. எனவே, சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலை டேப்லெட் தயாரிப்பை துவங்கியுள்ளது. கேலக்ஸி டேப் ஏ 7.0 என்ற ஸ்மார்ட்போனை ரூ.9,500 அறிமுகம் செய்துள்ளது. 
 
டேப் ஏ 7.0 4ஜி டேப்லெட், எச்டி டிஸ்பிளேயுடன், 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 9 மணிநேரம் வரையிலான வீடியோ பிளேபேக், 1.5 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி மெமரி மற்றும் 200 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு பொருந்தும் திறனை பெற்றுள்ளது.