அரசியலா? அமெரிக்காவா? குழப்பத்தில் கமல்?

kamal
Last Modified வியாழன், 4 ஜனவரி 2018 (22:24 IST)
நடிகர் கமல்ஹாசன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் டுவிட்டரில் மட்டும் அரசியல் செய்து கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவும், ரஜினி அரசியலுக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவும் காரசாரமாக தமிழக அரசை விமர்சித்து, விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் கூறினார்

இந்த நிலையில் திடீரென அரசியலை விட்டுவிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளை கவனிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். அமெரிக்காவில் அவருடைய நலவிரும்பிகள், இங்கேயே செட்டிலாகிவிடுங்கள், ஹாலிவுட் படங்கள் பண்ணலாம் என்று கூறி வருகிறார்களாம்.

எனவே தற்போது அவர் அரசியலா? அல்லது அமெரிக்காவா? என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் இதுகுறித்து அவர் மறைமுக அறிவிப்பு அறிவிக்கக்கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :