வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (07:22 IST)

எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை; தங்க தமிழ்ச்செல்வன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, வி.பி.கலைராஜன், சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டோர் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இந்த நடவடிக்கை குறித்து தமிழ்ச்செல்வன் கூறிகையில், அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை செல்லாது எனவும் எங்கள் பக்கம் நிர்வாகிகள் வந்துவிடுவர் என்ற பயத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்றார். எனினும், எல்லோரும் எங்கள் பக்கம்தான் வருவர் என்று கூறியுள்ளார்.